1. 12ம் இடம், 1ம் இடம், 2ம் இடம்
ஆகிய இடங்களில் ஏழரை ஆண்டுச் சனியாகவும் 2. 8ம் இடத்தில் அஷ்டமச் சனியாகவும்,
நான்கு ராசிகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆண்டுகள் பெரும் அளவு தீயபலன்களையே
கொடுப்பார்
ஏழரை ஆண்டுச் சனி (எழரை நாட்டுச் சனி அல்லது சாடே சனி என்றும் சொல்வார்கள்)
ஜாதகனின் சந்திரன்
அமர்ந்த ராசிக்குப் பன்னிரெண்டாம் இடத்தில் சனி வந்த நாள் முதலே துவங்கி ஏழரை
ஆண்டுகள் வரை
நீடிக்கும். அந்தக் காலக் கட்டத்தில் ஜாதகருக்குப் பொதுவாக தீய பலன்களே நடைபெறும்.
அனைவருடனும் கருத்து
வேறுபாடுகள்,சச்சரவுகள், வம்பு, வழக்குகள், தொழிலில் நஷ்டம் அல்லது பார்க்கும்
வேலையில் தொல்லைகள், இடமாற்றங்கள், குடும்பத் தினருக்கு உடல் நலக் குறைவு, மனவேதனை,
அமைதி யின்மை போன்றவைகள் ஏற்பட்டு ஆட்டிப்படைக்கும். ’சோதனைமேல் சோதனை போதுமடா
சாமி' என்று பாடும் அளவிற்குப் பாதகங்களை ஏற்படுத்தி விடுவார்.
சந்திர ராசியிலிருந்து 3ம்வீடு, 6ம்வீடு, 11ம் வீடு ஆகிய மூன்று ராசிகளைத்தவிர மற்ற
இடங்களில் அவர் நன்மை களைச் செய்வதில்லை. இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. அவர்
சஞ்சரிக்கும் ராசி அஷ்டவர்க்கத்தில் 30 பரல்களுக்கு மேல் பெற்ற ராசியாக இருந்தால்
அந்த இரண்டரை ஆண்டுகள் ஜாதகனுக்குத் தீமையான பலன்கள் இருக்காது.
ஒருவர் 90 ஆண்டுகள் வரை வாழ்கின்றார் என்று வைத்துக் கொண்டால், அவர் வாழ்க்கையில்
மூன்று முறைகள் இந்த ஏழரை நாட்டுச் சனி வந்து போய் விடும்.
அவற்றை முறையே மங்குசனி,
பொங்குசனி, மரணச்சனி என்பார்கள்.
முதலில் வரும் ஏழரை நாட்டுச் சனி மங்குசனி எனப்படும். அது அறிவு,கல்வி, வேலை
வாய்ப்பு அனைத்தையும் மங்க வைத்து விடும். மொத்தத்தில் வெறுத்து விடும்.(Defame and
detachment Period என்றும் சொல்லலாம்)
அடுத்த சுற்றில் வரும் சனி
கஷ்டத்தைக் கொடுக்கும், ஆனால் அதே நேரத்தில் பல அனுபவங்களையும்,
வாய்ப்புக்களையும் கொடுத்து உயர்த்தி விடும் (Elevation Period எனச்
சொல்லலாம்)அதனால்தான் அந்தக் காலகட்டத்தைப் பொங்குசனி' என்பார்கள்.
மூன்றாவது சுற்றில் வரும் ஏழரை நாட்டுச் சனி பொதுவாக ஜாதகனுக்கு, எட்டாம் வீட்டில்
நிர்ணயிக்கப் பெற்ற ஆயுள் அளவு (Span of Life) நிறைவு பெறும் காலமென்றால், அவனுடைய
கதையை முடித்துக் கையோடு கூட்டிக் கொண்டுபோய் விடும்.
சிலர் விதிவிலக்காக மூன்றாவது சுற்றையும் தாக்குப் பிடித்துக் கொண்டு உயிரோடு
இருப்பார்கள். அவர்கள்
தீர்க்க ஆயுள் பெற்ற ஆசாமிகள். அவர்கள், அவர்களின் ஜாதகத்தின்படி (In the period of
Second Lord or Seventh Lord) அதற்குரிய நேரத்தில் இறைவனடி சேர்வார்கள் அல்லது
இயற்கை எய்துவார்கள் இதுபோல குரு பகவானும் தனது சுழற்சியில் ஒவ்வொரு ராசியிலும்
தான் சஞ்சரிக்கும் காலத்தில் அததற்குரிய பலன்களை வாரி வழங்குவார்.அவர் ஒரு சுற்றை
முடிக்க சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ராசியிலும் அவர் ஒரு ஆண்டு
காலம் சஞ்சரிப்பார். அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில்,
7ம் வீடு, 11ம் வீடு, 5ம் வீடு,
9ம் வீடு ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது மிகவும் நன்மையான பலன்களைக்
கொடுப்பார்
வீட்டில் சுப காரியங்களை நடத்தி
வைப்பார், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். நல்ல வேலைக்காக
ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செல்வம் சேரும், வீடு, நில
புலன்கள் வாங்கும் வாய்ப்புக்களை உண்டாக்குவார். வழக்குகள் வெற்றி பெரும்.
மழலைச் செல்வம் கிடைக்கும். வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும்.
மொத்தத்தில் 'உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என்று பாட
வைத்து விடுவார்
நான் ஏழரைச்
சனியாக (12ம் வீடு, 1ம் வீடு, 2ம் வீடு) ஏழரை ஆண்டுகளும், அஷ்டமத்துச் சனியாக
(8ம் வீடு) இரண்டரை ஆண்டுகளும், கேந்திரச் சனியாக (4ம் வீடு) இரண்டரை
ஆண்டுகளும்,அர்த்தாஷ்ட சனியாக (7ம் வீடு) இரண்டரை ஆண்டுகளும், ஆக மொத்தம்
15 ஆண்டுகள் ஒருவரைப் பிடிப்பது வழக்கம். அதேபோல சுற்றில் மீதம் உள்ள 15 ஆண்டுகள்
அவரை விட்டு விலகி இருப்பதும் வழக்கம்.
குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.
ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால், அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள் தான் அனுபவிக்க நேரிடும்.
முதல் சுற்று: மங்கு சனி.மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி!
சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். உதாரணத்திற்கு பூசம்,
ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை முதல் 2 பாதங்களில்
இன்றைக்குப் பிறக்கும் குழந்தைகள் ஏழரைச் சனியுடன் பிறப்பர்
பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும்.
சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும்.
பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு
ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.
அதென்ன சார், பெரும்பாலோர்கள் என்று சொல்லித் தப்பிக்கின்றீர்கள்
என்று கேட்கதீர்கள். சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன்
ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.
அவை விதிவிலக்கு.
ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்
சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே
அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால்
நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள்.
அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும்
மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள்.
அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள்
குறைந்ததாக இருக்கும்.
அப்பாடா சாமி என்று நிம்மதிப் பெரு மூச்சை ஏழரை வருடங்கள் கழிந்த பிறகுதான்
விட முடியும்.
அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள்
சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக
இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச்
சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள்.
இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன்
கைதூக்கிவிடுவான். The native of the horoscope will be elevated to a good
position. It level will be according to the strength of the horoscope.
அதுவும் மேளம் அடித்துத் தூக்கிவிட மாட்டான். பல கஷ்டமான அனுபவங்களைக்
கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.
மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி
ஜாதகனுக்குப் போர்டிங் பாஸ் கொடுத்து மேலே அனுப்பி வைத்து விடுவார்.
மேலே என்றால் எங்கே என்று தெரியுமல்லவா?
அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால்
அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,
எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும்.
அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும்
சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும்
கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!
ஏழரைச் சனி என்றால் என்ன?
ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த ராசியிலும் சனீஷ்வரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்! உங்களுக்குப் புரியும்படி உங்கள் மொழியில் சொன்னால், அந்த மூன்று வீடுகளில் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து (அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச் சனியாகும்.
அதென்ன இரண்டரை வருடக் கணக்கு? அவர் வானவெளியில் எல்லா ராசிகளிலும் ஒரு ரவுண்டு அடித்துக் ஹாயாக சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள் ஆகும். அதை ராசிக் கணக்கிற்குக் கொண்டு வர 30 வருடங்கள் வகுத்தல் 12 ராசிகள் = இரண்டரை ஆண்டுகள். அவருடைய தொல்லைகளில் இருந்து தப்பிக்கும் யோகம் உண்டா? உண்டு! அந்த மூன்று ராசிகளிலும் அஷ்டவர்க்கப் பரல்கள் 30ற்குமேல் இருந்தால், அவருடைய தொல்லைகள் தடுக்கப்பெற்றுவிடும். ஜாதகன் தப்பித்துவிடுவான். அந்த மூன்று ராசிகள் என்றில்லை.
அவற்றில் ஒன்றில் 30 பரல்கள் இருந்தால் கூட அந்தப் பகுதிக்கு உரிய இரண்டரை வருடங்கள் ஜாதகன் நிம்மதியாக இருக்கலாம். அப்படி எத்தனை முறை அவர் வலம் வருவார்? 80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர் விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார். தொல்லைகள் ஒரே மாதிரியாகவா இருக்கும்? இல்லை! வேறுபடும்! முதல் சுற்று: மங்கு சனி.மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள் அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி மூன்றாவது சுற்று: மரணச்சனி அல்லது அந்திம காலச் சனி! இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது!
சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். உதாரணத்திற்கு பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை முதல் 2 பாதங்களில் இன்றைக்குப் பிறக்கும் குழந்தைகள் ஏழரைச் சனியுடன் பிறந்துள்ளன என்று வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள். ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால், அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள் தான் அனுபவிக்க நேரிடும். அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும். பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும்.
சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும். பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும். அதென்ன சார், பெரும்பாலோர்கள் என்று சொல்லித் தப்பிக்கின்றீர்கள் என்று கேட்காதீர்கள். சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம். அவை விதிவிலக்கு.
ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச் சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால் நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும். அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும். அப்பாடா சாமி என்று நிம்மதிப் பெரு மூச்சை ஏழரை வருடங்கள் கழிந்த பிறகுதான் விட முடியும். அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள் சோபிப்பதில்லை.
தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச் சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள். இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன் கைதூக்கிவிடுவான். The native of the horoscope will be elevated to a good position. It level will be according to the strength of the horoscope. அதுவும் மேளம் அடித்துத் தூக்கிவிட மாட்டான். பல கஷ்டமான அனுபவங்களைக் கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான். மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி ஜாதகனுக்குப் போர்டிங் பாஸ் கொடுத்து மேலே அனுப்பி வைத்து விடுவார்.
மேலே என்றால் எங்கே என்று தெரியுமல்லவா? அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால் அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும், எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும். அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும் சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும் கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு! |