| இடங்கொடான் கோடிபேரணுகினாலும் இயலானது வாதத்திலிருந்துகொண்டு மடமுடனே சிவாலயங்கள் கட்டுவான்பார் மகத்தான சித்தர்கட்கு தொண்டுபண்ணி திடமுடனே யவர்களிடங்கோடிகாலந்தான் தெரிசித்து விருப்பமுடன் யாவுங்கேட்டு சடமதற்கு காயசித்தி யேத்தவென்று சதாகாலம் நிஷ்டையிலே நிற்பர்தானே |