தேடவே சித்தர்களும் முனிவர்தாமும் தெளிவுடனே மறைப்பெல்லாம் தெரிவிப்பார் கூடவே யோகத்திற்குறுதிசொல்வார் குறியான வாசிபீடத்தைச்சொல்வார் நாடவே நாலுயுக மகிமைசொல்வார் நாதாக்கள் மறைப்பினுட மார்க்கஞ்சொல்வார் பாடவே போகரிஷி மர்மமெல்லாம் பாடிவைத்தேன் சத்தகாண்டந்தன்னில்தானே |