கூட்டவே தலைச்சுருளி சாற்தானாழி கொடிதான சிறியாளின் சாற்தானாழி நீட்டவே கொடிவேலின் சார்தானாழி நெடிதான புனல்முருங்கை சார்தானாழி பூட்டவே நறுதாளிச் சார்தானாழி புகலவே வெள்ளறுகுச் சார்தானாழி மாட்டவே புளியாரைச் சார்தானாழி மதிப்புடனே செங்கடுக்காடீநு சாற்தான்கூட்டே |