மாற்றான வெள்ளிக்கு நேரேதங்கம் மதிப்புடனே தான்சேர்த்து வுருக்கிப்பாரு தூற்றான திரைநீங்கி சிவந்ததங்கம் துரைகோடி சென்றாலும் பழுதுறாது காற்றான கானகந்தன்னிற்சென்று கருமூலிவிஷமூலி யாவும்பார்த்து சோற்றான துருத்தியென்னுங் காயந்தன்னை சுகம்பெறவே சாதித்துக் கற்பங்கொள்ளே |