| ஊற்றியே வெடியுப்புச் சீனந்தானு முயர்ந்துநின்ற துரிசியொடு சாரம்வீரம் ஆற்றியே வெள்ளையென்ற பாஷாணந்தா னப்பனே வகைக்குமொரு பலந்தான்தூக்கி சாற்றியே கல்வத்திற்பொடித்து மைபோல் சார்பாக முன்தெளிவிலொக்கப்போட்டுப் போற்றியே ஈசானபூசைபண்ணிப் புகழாக வடுப்பேற்றி யெரித்திடாயே |