அறிந்திட்டேன் வெள்ளியென்ற மலையுங்கண்டேன் அப்பனே செம்பினுட மலையுங் கண்டேன் பிரிந்திட்டேன் மேருகிரி தன்னிற்சென்றேன் ரோமரிஷிகள் முனிசித்தர்தம்மை பரிந்திட்டு யவர்களிடம் சென்றுபேசி பலபலவாஞ் சாத்திரங்கள் மறைத்ததெல்லாம் குறித்திட்டு வெளியாக்க வென்றேயெண்ணி குளிகையிட்டு சீனபதி யமர்ந்திட்டேனே |