மாண்டிட்டார் வரைகோடி ரிஷிசாபத்தால் மண்டிலத்தில் மடிந்தவர்கள் கோடாகோடி தூண்டிட்ட கருமான மின்னமொன்று சூட்சமுடன் சொல்லுகிறேன் மைந்தாகேளு வேண்டிட்ட திரவியங்கள் மெத்தவுண்டு விலாடனாம் நகரமதில் மலையோரந்தான் தாண்டிட்ட கோபுரமாந் தேவஸ்தானம் தனிப்பிள்ளையார் கோவில்வுண்டுபாரே |