புதுமையுடன் கனியொன்று யெனக்களித்தார் பொங்கமுடன் பசியாறி வீற்றிருந்தேன் பதுமைதனை யவரிடத்தில் கண்டேன்யானும் பட்சமுட னதுவருகில் நின்றிருந்தேன் பதுமையுட னென்னிடத்தில் மிகவும்பேசி கருவான மறைப்பையெல்லாம் பிரித்துக்காட்டி பதுமையுட னுபதேசஞ்செடீநுதுயென்னை மோட்சவழிக்கேகும்வழி சொல்லலாச்சு |