விடைதந்தார் மேருகிரி மேலேசென்றேன் மிக்கான சித்திரக்கூடந் தன்னைக்கண்டேன் தடைமுகமாந் தடாகமதில் புஷ்பங்கண்டேன் தாக்கான கருஞ்செந்தாமரையுங் கண்டேன் படைமுகமாம் ராட்சதாள் கூட்டமுண்டு படியோரம் யாராலும்கிட்டவொண்ணா சடைமரமாஞ் சவ்வாது மரமுங்கண்டேன் சந்தனமாம் விருட்சமுடன் மரங்கண்டேனே |