மனங்கொண்டார் சித்தர்முனி சிலதுபேர்கள் மதித்துமே ஞானோபதேசஞ்சொல்ல சினங்கொண்டார் சித்தர்முனி சிலதுபேர்கள் சீறியேயென்பேரிற் கோபங்கொண்டார் கனங்கொண்ட சித்தர்களை வணங்கியானும் காலடியில் தொழுதிட்டேனே பலநாளுந்தான் தினங்கொண்டு யெந்தனுக்கு விசேஷஞ்சொல்லி திறமான துறப்புமுதல் காட்டிட்டாரே |