விடைதந்தா ரெந்தனுக்கு சித்தர்தாமும் வெளிப்பட்டேன் மேருகிரிவரையிற்சென்றேன் மடையுடனே சுனையுண்டு குகைதானுண்டு மார்க்கமுடன் சித்தர்கள் கோடாகோடி நடையுடனே யவர்களிட பாதஞ்சென்றேன் நாதாக்க ளிருப்பிடமுந் துறையுங்கண்டேன் சடையுடனே ரிஷிதேவர் தவத்தில்நிற்க சாஷ்டாங்கம் பணிந்து தெண்டனிட்டேன்பாரே |