நினைத்திட்டே னென்சாமி குருவேயென்றேன் நினைத்ததொரு வண்மைதனை யறிந்துகொண்டார் முனைந்திட்டு சித்தரெல்லாம் என்னைப்பார்த்து முழிமிரட்டி காலாங்கி நினைத்தாயல்லோ கனைத்திட்டு மனோலயத்தை யறிந்துகொண்டார் காலாங்கிநாயனுடசீஷனென்று புனைந்திட்டு வென்மீதில் பட்சம்வைத்து புகடிநச்சியுடன் கொண்டனைத்தா ரென்னைத்தானே |