அருள்சொன்னார் வேதாந்தமெனக்களித்தார் அப்பனேசூட்சமத்தின் நேர்மைசொன்னார் பொருள்சொன்னார் சித்தரகளது மறைப்புமார்க்கம் பூட்டினார் கருநிறை மறைப்புயாவும் இருள்சேர்ந்த காட்டகத்தி லென்னைக்கண்டு யேற்றமுடன் காயாதிகற்பந்தன்னை தெருளுடனே கூடுவிட்டு கூடுபாயும் திறமான வித்தைதன்னை தெரிவித்தாரே |