சாமமாஞ் சுருக்குடனே கட்டிப்போகும் சார்வான லிங்கமது மெழுகிலோடும் தாமமாஞ் சரக்குவகை சொல்லக்கேளு தளுக்கான வரப்பொடியுஞ் சிங்கிதானும் காமமாஞ் சுருமாவுஞ் சாரந்தானும் கடிதான படிகாரம் யுப்புமாகும் பூமமாம் வகைக்கொரு பலமேவாங்கு பொங்கமுடன் குழிக்கல்லில் பொடித்திடாயே |