கட்டியதோர் லிங்கமதை தானெடுத்துக் கணக்காக வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று திட்டமுடன் தான்கொடுத்து வுருக்கிப்பாரு தெளிவான மாற்றதுவும் ஏழதாகும் நட்டமென்ன பத்திலோர் தங்கஞ்சேர்த்து நயமாக வாரடித்துப் புடமேபோடு சட்டமுடன் தானெடுத்து யெடுத்துப்பாரு சார்வான புடத்தங்க மாகும்பாரே |