| வண்மையா மின்மொரு மார்க்கங்கேளு வளமான வங்கமொரு பலமேதூக்கு திண்மையாந் தாளகமும் பாஷாணந்தான் திறமான சவுக்காரச் சாரந்தானும் உண்மையாம் பூநீறு கிளிஞ்சிற்சுண்ணாம்பு வுத்தமனே வகைக்கொரு பலமும்தூக்கு நன்மையாங் கல்வத்திலாட்டியேதான் நலமாபெறவே கலசமென்ற குடுவைவாங்கே |