ஆடினார் சீனமென்ற தேசந்தன்னில் அன்புடனே மாணாக்கள் பிழைக்கவென்று பாடினார் சித்தர்முனி சொன்னநூலைப் பரிவாகத் தானெடுத்து பாருவோர்க்கு மூடினதோர் வுளமெல்லாம் மிகவேபார்த்து முயற்சியுடன் வெளியங்கமாகச்செடீநுதேன் கூடினதோர் கருமான மெல்லாந் தேர்ந்து குறிகண்டு நிலைகண்டார் சீனத்தாரே |