தேசமென்றால் தேசமதுசீனமாமோ ஜெகத்திலே கண்டவர்கள் யாருமில்லை பாசமென்றால் பிரம்மத்தின் பாசமாகும் பாருலகில் சதாநித்தம் தொழுவார்மாந்தர் நேசமென்றால் போகரிஷிதன்னைப்போற்றி நெடுங்காலஞ் சமாதியிலே யிருந்தார்கோடி வாசமுடன் சீனபதி யாவுங்கண்டேன் வளமாக மாந்தருட வுண்மைபாரே |