வண்மையா மின்னமொரு கருமானங்கேள் வுத்தமனே மாணாக்கள் பிழைக்கவென்று தண்மையாம் நாகமது சேர்தானொன்று தாக்கான பாஷாணம் சேர்தானொன்று கண்மையாஞ் சுண்ணாம்புஞ் சேர்தான்பாதி கருவான மதியுப்பு சேர்தான்காலாம் நன்மையா மித்தனையு மொன்றாடீநுச்சேர்த்து நலம்பெறவே சிப்பியென்ற சாரத்தாட்டே |