சாரமென்ற ஜெயநீரி லரைத்துமைந்தா சாங்கமுடன் நாகத்துக் கங்கிபூட்டி காரமென்ற சுண்ணாம்புச் சீலைசெடீநுது கருத்துடனே ரவிதனிலே காயவைத்து ஈரமென்ற சீலையது காடீநுந்தபின்பு யென்மகனே கோழியென்ற புடத்தைப்போடு பாரமென்ற கண்ணதுவும் நீங்கியேதான் பளபளத்த வெள்ளியது வாகுந்தானே |