கண்டிட்ட மனத்தாலே தவமுமாச்சு கவர்ந்ததுவுமுயிரதுவும் மனமேயாச்சு மண்டிட்ட வாயுமேல் மனமுமாச்சு மகத்தான சஞ்சலத்தால் மனம்பேயாச்சு அண்டிட்ட தீபம்போல் மனமேசென்று அண்டத்தில் சேர்ந்ததென்றால் அதுவேபோதம் மண்டிட்ட மனம்விட்டால் ஞானம்போச்சு வாசியைத்தான் நழுவவிட்டால் யோகம்போச்சே |