வசனித்தே னின்னமொரு கருமானங்கேள் வாகுடனே மாணாக்கள் பிழைக்கவென்று தூசனித்த பாஷாணம் பலமொன்றாகும் துடியான சிப்பியென்ற சுன்னந்தானும் பசனித்த சுக்கான்தன் சுண்ணந்தன்னை பாகுடனே பாஷாணத்தங்கிபூட்டி நிசினித்து சட்டியிலே மணல்தான்கொட்டி நிறையவே மணலாகில மூடிப்போடே |