ஏற்றவே சாமமது யிருபதாகும் யெழிலான தீமூட்டி யெரித்தாயானால் மாற்றமுடன் செந்தூரமென்ன சொல்வேன் மயங்காதே வருண்மைந்தா புகலக்கேளு சீற்றமென்ற செம்புதனில் பத்துக்கொன்று திறமுடனே தானுருக்கிக் கொடுத்துப்பாரு கூற்றமென்ற வூரலதுயெங்கேபோச்சு குணமான செம்பதுவு மாற்றமாச்சே |