உரைத்திட்டேன் காலாங்கிதனைநினைத்து உத்தமனே ஒருகோடி நூலைப்பார்த்து நிரைத்திட்டேன் சாத்திரத்தி னுளவையெல்லாம் நேர்மையுடன் பிழைக்கவென்று யானுஞ்சொன்னேன் குரைத்திட்டேன் சித்தர்சொன்ன நூலையானும் குவலயத்தில் பிழைப்பதற்கு காண்டஞ்சொன்னேன் உரைத்திட்டே னேழுலட்சங் கிரந்தந்தன்னை யேழைகட்கா யிரக்கம் வைத்துபாடினேனே |