நேரான வுப்பையெல்லாம் சுரண்டிவாங்கி நேர்ப்புடனே மறுசட்டிதன்னிற்போட்டு கூரான தீநெருப்பில் யெரிக்கும்போது குணமுடனே வுப்பெல்லாம் வுருகிக்கட்டும் பேரான வுப்பதுவும் வயிரம்போலாம் பெரிதான வயிரமதையெடுத்துக்கொண்டு சேரான மண்ணான சட்டிதன்னில் தெளிவுடனே காச்சியல்லோ மூசைக்கேற்றே |