தியங்கிட்டு வடியேனும் காலாங்கிதன்னைத் தியக்கமுடன் தானினைத்துவிழித்து பார்த்தேன் மயங்கிட்ட யெந்தனையும் ரிஷிகள்பார்த்து மனமிறங்கி தீரமுடன் வதீதஞ்சொன்னார் தயங்கிட்ட யெந்தனையும் யாரென்றுகேட்க தாடிநமையுடன் சிரங்குவித்து வணக்கஞ் சொன்னேன் நயங்கிட்டு வடியேனும் குளிகைபூண்டு நாட்டமுடன் பூவிளையும் தேசம்வந்தேன் |