வந்தேனே பூமிவளங்காண வந்தேன் வளமையுடன் நாதாக்களெடுக்கும் ஸ்தானம் சந்தேகமில்லா தவனந்தானாடு சார்புடனே மலைகுகைகள் யாவுங்கண்டேன் தொந்தமுடன் நதிகரைகள் யமுனையாவும் தோறாமல் குளிகைகொண்டு சுத்திப்பார்த்தேன் எந்தனிட தைரியங்கள் மிகவுமாகி யேகினேன் பொன்னகரங் காணத்தானே |