கண்டேன் சதாசிவத்தின் கோயில்கண்டேன் கைலங்கிரிவாசரை யான்கண்டதில்லை தொண்டுசெயும் ரிஷிமுனிவர் பாதங்கண்டேன் தோராத வர்ச்சனைகள் யாவும்பார்த்தேன் அண்டரண்டசராசரங்க ளிதற்கீடல்ல ஆதிசேடன் தன்னாலுங் காணலாகா தெண்டமுடன் மேற்புரம் வாசல்வந்தேன் தேவரிஷிமுனியென்றொருவர் கண்டேன்தானே |