கேட்டவுடன் பெண்களெல்லாங் கிருபைவைத்து கிருபையுடன் கண்ணபிரான் பக்கல்வந்து கோட்டமுடன் பன்னீராயிரம்பேரும் நுணுக்கமுடன் தானுரைத்தா ரென்னைத்தானும் தேட்டமுடன் சீனபதியிருந்த சித்தன் திறமுடனே லோகமெல்லாம் காணவென்று வாட்டமுடன் குளிகையது பூண்டுகொண்டு வந்திட்டானும்பர்பதி யென்றிட்டாரே |