| தாமேதான் சித்தர்முனி ரிஷிகள்தாமும் தயவுடனே யெந்தனுக்கு வதீதஞ்சொன்னார் போமேதான் குகைமுத்தும் கிடாரந்தன்னை பொங்கமுடன் தான்கொண்டு காண்பித்தார்கள் நாமேதான் கண்டுமனமுவந்துமெத்த நாதாக்கள் கிருபையது மிகவும்பெற்றேன் ஆமேதான் விசுவாச மருளும்பெற்று அப்பனே சீனபதி யமர்ந்திட்டேனே |