ஓதவே யடியேனுக் குறுதிசொன்னார் வுத்தமனே போகரிஷி சொல்லக்கேளும் நீதமுடன் சாஸ்திரங்க ளெல்லாங்கற்றீர் நிலையான காயத்தை நிறுத்தக்கண்டீர் தோதமுடன் சித்தருட குளிகைகொண்டீர் தோராதகீர்த்தியுடன் சீனம்சென்றீர் பாதமுடன் காலாங்கி யருளும்பெற்றீர் பட்சமுடன் சித்தருட வரங்கொண்டீரே |