என்னவே யடியேனும் தாள்பணிந்தேன் யெழிலான காலாங்கிதனை நினைந்தேன் சொன்னதோர் சித்தர்கட்கு விடையுஞ் சொன்னேன் சுடரொளியாங் காலாங்கி சீஷனென்றேன் நன்னயமா யெனையழைத்து குகையிற்சென்று நாதாக்களிருப்பிடமும் காண்பித்தேதான் பன்னயமாஞ் சித்தர்களின் மரபுசொல்லி பட்சமுடனெந்தனுக்கு வழிசொன்னாரே |