விட்டவுட னடியானுந் தாள்பணிந்து விருப்பமுடன் காலாங்கிதனைநினைத்தேன் கிட்டநின்ற பாலகனுமே சிரங்குவித்து கிருபையுடன் திருச்சங்கைக் காணவென்று திட்டமுடன் முழங்காலு சமாதியிட்டுத் தீவிரமா யடிதொழுது போற்றிநின்றேன் சட்டமுடன் சமாதியது தான்திறந்து சடுக்கெனவே சத்தமது கேட்டிட்டேனே |