கேட்டவுனடியேனுங் கிடுகிடுத்து கிருபையுடன் சாஷ்டாங்கஞ் சமர்ப்பித்தேதான் வாட்டமுட னெந்தனையாரென்று கேட்க வளமுடனே சிறுபால னுரைக்கலுற்றேன் பாட்டரென்ற திருச்சங்கு ராஜன்தன்னை பாரினிலே காண்பதற்கு மனமுவந்து கோட்டமுடன் சமாதியிடம் வந்தேனென்று நுட்பமதாடீநு போகரிஷிவுரைத்திட்டேனே |