பாரென்ற போதையிலே யானடுங்கி பட்சமுடன் பாட்டரையான் பரிவுகேட்டேன் நேரென்ற சேதியெனக்கு பாட்டரென்றேன் விருப்பம்வைத்து யெந்தனுக்கு ஞானோபித்தார் சீருடனே யடியேனும் நடுநடுங்கி சிறப்புடனே வுபதேசம்பெற்றுக்கொண்டு பேருடனே காலாங்கி தனைநினைந்து பேரின்பசாகரத்தை யடைந்திட்டேனே |