கரைகாணாகோடி பிர்மாகண்டாரையா கரையற்ற விஷ்ணுமயம் கோடிகண்டார் தரைகாணா சங்காரங்கோடி கண்டார் தாக்கோடே மஹேஸ்பரத்தைத் தாண்டிநின்று துரைகாணாச் சதாசிவன் தானொடுங்கிச்சத்தி துலையாத வாதமுடன் விந்துவற்று திரைகாணா சிவன்சென்று சிற்பரையிற் சேர்ந்து தெளிகடந்த பூரணத்தில் சொக்கினாரே |