| மகிழவே யடியேனும் விடைகள்பெற்று மார்க்கமுடன் வெள்ளையென்ற மனிதர்பக்கம் நெகிழவே போயிருந்து யாவுஞ்சொன்னேன் நெடிதான கருவிகரணாதியெல்லாம் மகிழவே முடித்திட்டேன் தலைகீழாகச் சதாகாலம் வெள்ளையென்ற மனிதருக்கு புகழவே சீனபதியோர்கள் மெச்ச புகட்டினேன் வினோதமென்ற வித்தைதானே |