காணோமே யென்றுமல்லோ கலங்கிநின்றேன் காலாங்கிநாதருட கிருபையாலே தூணதுபோ லங்கிருந்த விருட்சந்தன்னில் சுடரொளிபோல் ஜோதியது காணலாச்சு வீணையுடன் வாத்தியங்கள் முழங்கலாச்சு வேதாந்த தாயினது மகிமையப்பா நாணமுடன் பார்த்துமுனி சித்தரப்பா நடுக்கமுடன் தானடுங்கி பயந்திட்டாரே |