தட்டையிலே காத்தாடிதான்பறந்து சந்திரனார் மண்டலத்தி னளவுமட்டும் நெட்டையிலே தான்பறந்து நின்றுவாடும் நிலையான சூட்சாதி சூட்சத்தாலே முட்டையிலே வுள்ளிருந்த கருவைப்போலு மொருகுடனே நின்றாடும் நெடுநேரந்தான் சட்டையிலே நார்பட்டு காற்றைக்கொண்டு சடுதியிலே தானெடுக்கும் பான்மைபாரே |