பான்மையாம் வாயுவது மேலாதாரம் பற்றுகையில் காத்தாடி மேலேநோக்கும் வான்மையுடன் நடுக்கம்பி வட்டந்தன்னில் நயமுடனே சூட்சாதி சூட்சந்தன்னை மேன்மையுடன் கயிறுமாட்டி சுருக்கும்போது மெல்லெனவே காத்தாடி இறங்கலாகும் தான்மையுடன் சுக்கானின் சூட்சமப்பா தாரணியிலாரறிவார் விசுவர்தானே |