முடித்தேனே சீனமென்றபதியில்தானும் முனையான காத்தாடி யடிவாரத்தில் படித்தளமாம் தோணியது மிகபோல்கட்டி பாங்கான மாளிகைபோல் தானமைத்து குடித்தனமாஞ் ஜனங்கள் பதினாயிரம்பேர் குடையடியில் தானேத்திக் கொண்டுசென்று நடிப்புடனே தேவாதிதேவர்தானும் நாணமுற்று பார்த்திடவே நடத்தினேனே |