அன்புற்றார் கமலமுனி சேதிகேட்டு அப்பனே போகரிஷிசொல்லக்கேளும் வன்புற்ற யிதிகாசவித்தையெல்லாம் வளமுடனே காட்டிவிட்டால் பூலோகத்தில் இன்புற்று யாரொருவர் மதிக்கப்போறார் யேகவெளியாகிவிடும் மன்னாகேளு துன்புற்று யெந்தனையும் சபிப்பாரப்பா சூட்சாதி சூட்சமதை வெளிக்காட்டாதே |