ஆச்சென்ற இருபதுபேர் காமத்தாலே யனேகநாளிருந்துமே லிருந்துபோனார் போச்சென்று அவர்பிடித்தார் பிராணயோகம் பேரானசிவகளை மூர்க்கத்தாலே பேச்சென்ற வாணவம் பிறந்தால் பார்மேற் பேறுபெற அவர்போலே யாருக்காகும் மூச்சென்று முந்திமுந்தி மூலயோகம் ஒளிவுகண்ட மட்டுமே நெஞ்சிற்பாரே |