சொல்வானே மாணாக்கள் பிழைக்கவென்று சூட்சாதி சூட்சமெல்லாம் பிரித்துசொல்வான் வெல்வான மின்னமொரு கருமானங்கேள் மிக்கான வதீதமென்ற வித்தைதன்னை பல்வானே ஈடொன்று புகலக்கேளும் பொலுவான சீஷனுக்கு மைந்தாகேளு நல்லதொரு செவ்வட்டை செம்பூநாகம் நலமான குழியானைப் பூச்சியாமே |