| புண்ணியனே வின்னமொரு கருமானங்கேள் புகலுகிறேன் நாகமென்ற செந்தூரந்தான் திண்ணமுடன் நாகமொரு பலமேவாங்கு திறமான செம்பதுவும் பலமோகால்தான் வண்ணமுடன் வயமதுவும் பலமோகால்தான் வகுப்பான வங்கமது பலமோகால்தான் நண்ணமுடன் தங்கமது பலமோகால்தான் நலமான ரசமதுவும் பலமும்ரண்டே |