ஏற்றவே கமலமென்ற தீயாலப்பா என்மகனே யெண்சாமம் யெரித்தாரப்பா போற்றவே யாறியபின் எடுத்துப்பாரு பொங்கமுடன் செந்தூரம் சொல்லப்போமோ வாற்றமென்ற செந்தூரம் பதனம்பண்ணு மகத்தான வேதையிது கோடாகோடி நாற்றமென்ற செம்பதனில் நாலுக்கொன்று நலமுடனே தானுருக்கிக் கொடுத்துப்பாரே |