வாங்கியே தயிலமது பதனம்பண்ணு வாகுடனே தயிலமதை யெடுத்துமைந்தா பாங்குபெற வாருமாற்றானிக்கொப்பால் பசும்பொன்னாம் விராகனது தகடடித்து தீங்கில்லாத் தயிலமது குன்றிதானும் திகழாகத்தானெடுத்துப்பூசி மைந்தா ஏங்கியே திரியாதே புடத்தைப்போடு யெழிலான பொன்னதுவு மாற்றுபாரே |