பார்த்திட்டேன் சாலமென்ற வித்தைதன்னைப் பரிவாக சீனபதிலுற்றோர்தாமும் கார்த்திட்ட வித்தைக்கு யெந்தன்மீது கருணைபெற வெகுபேர்கள் ஆசீர்மித்தார் ஐர்ந்திட்டே னவர்களுக்கு வுபதேசித்தேன் யெழிலான வித்தைகளை கற்பித்தேதான் ஊர்ந்திட்டு சீனபதிவிட்டு நீங்கி வுத்தமனே குளிகையது கொண்டேன்தானே |