எட்டான மேலவாசல் சன்னலாகும் மெழிலான வைந்தாங்கால் மச்சுயாக்கி திட்டான மாளிகையா மறுபத்திநாலு திடமான கோட்டையது நூற்றிருபத்தெட்டு மட்டான வழிகளிலே சூத்திரங்கள் மாட்டி மகத்தான கிராதிகளில் பிரதமைகளமைத்து வட்டான வாசலு நெடுவாசல்வட்டம் வகுப்புடனே யிரும்புகம்பி யிருத்துநான்கே |